புத்துயிர் பெறவுள்ள சுதந்திரக் கட்சி 

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் மாநாடு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நேற்று(01.06) நடைபெற்றது. கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு தொகுதி அமைப்பாளர்களை அழைப்பது தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் உயிர் பெற்று முன்னோக்கி செல்ல ஆரம்பித்துள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் எவ்வித பிளவும் இல்லை என சுட்டிக்காட்டிய கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க, சுதந்திரக் கட்சியின் உதவியுடனே எதிர்காலத்தில் ஜனாதிபதி தீர்மானிக்கப்படுவார் என்றும் சுதந்திரக் கட்சியின் தலையீட்டுடன், தமது தலைமையின் கீழ் ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version