நாட்டையே புரட்டிப் போட்ட இயற்கை சீற்றம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இயற்கை அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நிலவுக் கூடும் அனர்த்தங்களை கருத்திற் கொண்டு மீட்பு பணிகளுக்காக 03 ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

பலத்த மழை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு ஐந்து கடற்படைக் குழுக்களும் 10 படகுகளும் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், அயகம, தெஹியோவிட்ட, கிரியெல்ல, மொரவக்க, தவலம மற்றும் திஹாகொட பிரதேசங்களில் தலா மூன்று படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார
தெரிவித்தார்.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற் கொண்டு 07 மீட்பு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கிரியெல்ல, தெஹியோவிட்ட, கலத்துரு ஓயா, மொரவக்க, தவலம மற்றும் திஹகொட பகுதிகளுக்கு ஒரு படகுடன் 6 இராணுவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெலுவ பிரதேசத்திற்கு 02 படகுகளுடன் இராணுவக் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாலிம்படை மற்றும் சாலாவ பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவதற்காக இராணுவப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான தேவை ஏற்படும் பட்சத்தில் படையினரை தயார்படுத்துமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பாதுகாப்பு படைத் தளபதிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version