அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கிடையில் இன்று (02.06) T20 உலககிண்ணத்தில் முதலாவது போட்டி அமெரிக்காவிலுள்ள டல்லாஸில் நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்கா அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய கனடா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றது. இதில்
நவ்நீட் தனிவாள் 61(44) ஓட்டங்களையும், நிக்கொலஸ் கிர்ட்டொன் 51(31) ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் மொவ்வா அட்டமிழக்காமல் 31(16) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அலி கான், ஹர்மீட் சிங், கோரி அண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய அமெரிக்கா அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்களை பெற்றது. இதில் ஆரோன் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 94(40) ஓட்டங்களையும், அன்ரிஸ் கௌஸ் 65(46) ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த போட்டியின் நாயகனாக ஆரோன் ஜோன்ஸ் தெரிவு செய்தது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பப்புவா நியூகினியா அணிகளுக்கிடையில் இன்று (02.06) இரவு 8.00 மணிக்கு T20 உலகக்கிண்ணத்தின் இரண்டாவது போட்டி மேற்கிந்திய தீவுகளில் உள்ள குயானாவில் நடைபெறவுள்ளது.