சஜித்துடன் இணைந்த மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பதியத்தலாவ தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவினை தெரிவிக்கும் நோக்கில் இன்று(03) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தின் 218வது கட்டமாக அம்பாறை, தெஹியத்தகண்டிய, சந்துன்புர தேசிய பாடசாலைக்கு 1,177,000 ரூபா பெறுமதியான திறன் வகுப்பறையொன்றை வழங்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு இணைந்து கொண்டார்.

1971 மே 2ம் திகதி பிறந்த அவர், தனது உயர் கல்வியின் பின்னர் இலங்கை இராணுவ மருத்துவ படையில் இணைந்து பணியாற்றினார். அம்பகவெல்ல பிரதேச வைத்தியசாலை மற்றும் அம்பாறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தின் பிரதானியாகவும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version