இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 290 அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று(04.06) செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. மொத்தமாகவுள்ள 543 தொகுதிகளில் முன்னதாகவே சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றிருந்த நிலையில் எஞ்சிய 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது.
நேற்று இரவு நிலவரப்படி பாஜக 239 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பாஜக கூட்டணி 290 அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் பாஜக கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
பாஜக கூட்டணிக்கு வரலாற்று வெற்றி அளித்த வாக்காளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் மீதான நம்பிக்கைக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 90 அதிகமான தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளதுடன், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 235 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் நாளை கூடவுள்ளதாகவும், அதன்போது எதிர்க்கட்சியில் அமர்வதா அல்லது வேறு முயற்சியை எடுப்பதா என்பது தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக ராகுல் காந்தி நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இந்தியத் தேர்தல் முடிவுகளின் படி, தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியே கைப்பற்றியுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியமைத்த தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திர மாநிலத்தில் 164 தொகுதிகளைத் தெலுங்கு தேசம் கட்சி கைப்பற்றியுள்ளது. மேலும், இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாகக் கேரளாவில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் முடிவுகள்,