சிறுமி மீதான தாக்குதல் சம்பவம் – ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு?

சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த சிறுமி கடுமையாக தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (05.06) பிற்பகல் பதவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தாய், சித்தப்பா, பெண்கள் இருவர் மற்றும் பிரதான சந்தேகநபரான குகுல் சமிந்த ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தாயை உளநல வைத்தியர் ஒருவரிடம் அனுப்பி அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சிறுமியை அனுராதபுரம் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version