அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உருளைக்கிழங்கு 75 ரூபாவால் குறைக்கப்பட்டு 350 ரூபாவுக்கும், கோதுமை மா 05 ரூபாவால் குறைப்பட்டு 190 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

அத்துடன் வெள்ளை கௌபீ 110 ரூபாவால் குறைப்பட்டு புதிய விலை
990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன்
சிவப்பு கௌபீ 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 950 ரூபாவுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காய்ந்த மிளகாய் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 780 ரூபாவுக்கும், நெத்தலி 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 930 ரூபாவுக்கும், கடலைப் பருப்பு 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version