ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளர்? 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட உள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டிற்கு தலைமைத்தங்கவும், நாட்டை அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதிக்கு காணப்படும் இயலுமையை சுட்டிக்காட்டி ஜனாதிபதியின் ஆலோசகர் நேற்று(06.06) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டை தன்னால் அபிவிருத்தி செய்ய இயலும் என நிரூபித்துக் காட்டியுள்ள ரணில் விக்ரமசிங்கவே, நாட்டிற்கு காணப்படும் ஒரே தீர்வு எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்  ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். 

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அரசியல் அலுவலகம் கொழும்பில் நேற்று(06.06) திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதியின் ஆலோசகர் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version