இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நீடிக்கப்பட்ட செயற்குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் டெல்லியில் இன்று சனிக்கிழமை (08.06.24) இடம்பெற்றது.
இதன்போது ராகுல் காந்தி இந்திய மக்களவை எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை
காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தேர்வின் பின்னர் ராகுல் காந்தியின் கருத்துக்கள் இதுவரை வெளியாகிவில்லை.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து
கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது மக்களவை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல்கள், கூட்டணிக் கட்சிகளுடன்
இணக்கமான போக்கைக் கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.