இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக டெங்கு நுளம்புகள் பெருக்கம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 25,619 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், குறித்த எண்ணிக்கை 5,554ஆக காணப்படுகின்றது.
மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்நிலையில், டெங்கு நோய்ப் பரவலை தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்பு பெருகும் இடங்களை அழிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.