இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் குறித்து விசேட அறிவிப்பு

ரயில்வே இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்ற
போதிலும் இன்று இரவு நேர (08.06) அஞ்சல் ரயில் சேவை வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தூர இடங்களுக்கான ரயில்வே சேவைகளும் வழமை போன்று இன்று (08.06) இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே இயந்திர இயக்குநர்களின் இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதமடைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை
முன்வைத்து அவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version