டில்லிக்கு பறந்த ஜனாதிபதி

இந்தியப் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவிப்
பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் புதுடெல்லிக்கு பயணித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பெயரில் ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றதையடுத்து மூன்றாவது
முறையாகவும் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

பதவியேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று (09.06) மாலை 6 மணிக்கு புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்
இடம்பெற உள்ளது. இதன்போது மோடியின் அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.

இதன் காரணமாக டில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ட்ரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மலைத் தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ்,
சீசெசல்ஸ் துணை ஜனாதிபதி அகமது அஃபிப், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்னாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் எனும் பிரசண்டா, பூட்டான் பிரதமர் ஷெரிங் தோப்கே ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version