அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் தேர்தல் நடைபெறவுள்ள வருடம் என்பதால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ருவன்வெல்லயில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 2025ம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்காக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.