ரயில் சாரதிகள் கடந்த 4 நாட்களாக முன்னெடுத்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால், ரயில் சேவையில் ஏற்பட்ட இழப்பீடு தொடர்பில் இதுவரை கணக்கிடப்படவில்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
இந்த மாத இறுதிக்குள் குறித்த இழப்பீடு மதிப்பிடப்படும் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தின் காரணமாக ரயில் சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாமையினால் சுமார் 5 சதவீத வருமானம் இழக்கப்பட்டிருக்கலாம் என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும். ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தின் போது சில ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக பாரியளவிலான நட்டம் ஏற்பட்டிருக்காது என இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.