நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26ம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்குமாறு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்ததாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளைய தினம்(12.06) கண்டன போராட்டத்தை ஏற்பாடு செய்யவதற்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.