மூக்குத்திப்பூ திரைப்படம் திரையரங்குகளில்..!

மூக்குத்திப்பூ திரைப்படம் எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா, அமுதா திரையரங்கில் மழை 5:00 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படம் யூன் மாதம் 7ம் திகதி வெளியிடப்பட்டு வெற்றிகரமாக நிறைந்த மக்கள் கூட்டத்தோடு ஓடியது.

முதல்நாள் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திரைப்படத் தயாரிப்பாளரும் சர்வதேச கல்விநிறுவனமான IDM பல்கலைக்கழகத்தின் தலைவருமான Dr ஜனகன் வினாயகமூர்த்தி கலந்து சிறப்பித்தார்.

இவர்களோடு யாழ்பல்கலைக்கழக ஊடகத் துறைத் தலைவர் Dr ரகுராம் அவர்களும், பேராசிரியர் சிதம்பரநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். அத்துடன் பாஸ்ரர் சந்துரு பெர்னான்டோ அவர்களும் கலந்து திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் பெரும் திரளான பார்வையாளர்களும் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version