எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடாமல், சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவாரென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் மறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற போதும் உரிய நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென கொலன்னாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிப்பதாகவும், மேலும் பல கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தி, அதில் வெற்றியடைவதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க அறிவித்துள்ளார்.