வாகன இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பான வேலைத்திட்டங்களை
வகுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்
ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியானது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை நேரடியாகப் பாதிக்கும் என்பதால்,
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான வரைபடத்தை சர்வதேச நாணய
நிதியத்திடம் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நியமிக்கப்பட்டுள்ள குழுவில் நிதி அமைச்சின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களம்,
மோட்டார் போக்குவரத்து திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, வாகன இறக்குமதி துறைகளின் பிரதிநிதிகள்,
கைத்தொழில் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு போன்ற முக்கிய பங்குதாரர்கள் உள்ளனர்” என அமைச்சர் கூறியுள்ளார்.
பொது போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து மற்றும் பொது மக்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும்
கார்கள் போன்ற பொதுவான மாற்றுகளுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவது
குறித்து ஆரம்ப கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் சொகுசு வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் எனவும்
அவற்றின் பொருளாதார தாக்கங்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர்
ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.