ஸ்ரீ ஜயவர்தனபுறக் கோட்டையில் வேலையற்ற பட்டதாரிகளால் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைக்கப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
தியத்த உயனவிற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
‘தொழில் உரிமையாகும்’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை – லோட்டஸ் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.