இலங்கையில் மாற்றுப் பாலினத்தை ஊக்குவிக்க கனடா அரசாங்கம் முயற்சி 

இலங்கையில் மாற்றுப் பாலினத்தவர்களை(Transgender)  ஊக்குவிப்பதற்கு கனடா உயர்ஸ்தானிகராலயம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

மாற்றுப் பாலினத்தவர்கள் தொடர்பான பிரச்சினைகளை பாலின சமத்துவ சட்டமூலத்துடன் இணைக்காமல், தனியாக தீர்வு காண வேண்டும் எனவும் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் இன்று(19.06) தெரிவித்துள்ளார். 

மாற்றுப் பாலினத்தவர்களை ஊக்குவிப்பது இலாபகரமான வியாபாரம் என சுட்டிக்காட்டிய அவர், மேற்கத்திய நாடுகளில் பாடசாலை மாணவர்கள் தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் பாலினத்தை மாற்றி கொள்ளும் தெரிவு வழங்கப்படுவதாகவும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார். 

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு சுமார் 4,000 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version