பயிற்சி திட்டத்தை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து

இலங்கை பொலிஸின் விசேட படையணிக்கு (Special Task Force (STF)) கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பயிற்சியளித்து வரும் ஸ்கொட்லாந்து பொலிஸின் பயிற்சி திட்டத்தை உத்தியோகபூர்வமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து பொலிஸாரின் அண்மைய உயர்மட்ட கலந்துரையாடலில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிப்போரில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை மேற்கோள்காட்டி இலங்கை பொலிஸூக்கான பயிற்சியை நிறுத்துவது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சித்திரவதையில் இருந்து விடுதலை (Freedom from Torture) மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP) போன்ற மனித உரிமை அமைப்புகள் முன்னர் இருந்தே ஸ்கொட்லாந்து அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தம் வழங்கி வந்தன.

இதனைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்து பொலிஸ், இலங்கைக்கு பொலிஸ் பயிற்சியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதை மீளாய்வு செய்ய வேண்டுமெனப் பல பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை அமைப்புக்கள் பலவும் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், நீண்டகால உயர்மட்ட கலந்துரையாடல்களின் பின்னர் இலங்கைக்கான பொலிஸ் விசேட பயிற்சி திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி திட்டத்தை இடைநிறுத்தியது ஸ்கொட்லாந்து
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version