பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு 

2024ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப்  பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கால எல்லை மேலும் நீடிக்கப்படமாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் உரிய திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.  

எதிர்வரும் 10ம் திகதி வரை இணையம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்கள், பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சைத்  திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும், கைத்தொலைபேசி மூலமாகவும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலும் எனவும், இதற்கான மேலதிக தகவல்களை திணைக்களத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1911 அல்லது பொது தொலைபேசி இலக்கங்களினுடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version