289 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு 

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால பொது மன்னிப்பு வழங்கப்பட்ட 289 சிறைக் கைதிகள் இன்று(21.06) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், சிறு குற்றங்களுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த 289 கைதிகளுக்கு இன்று (21) விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி  திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

மஹர, வாரியபொல சிறைச்சாலைகளிலிருந்து 30 கைதிகள்,  களுத்துறை சிறைச்சாலையிலிருந்து 28 கைதிகள், வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 19 கைதிகள்   உட்பட நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களுள் 283 ஆண்களும், 6 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version