‘வேலு குமார் எம்.பியே துணிச்சல் மிக்கவர்’ – மனோ எம்.பி

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் துணிச்சல் மிக்கவரும் பாராட்டுக்குரியவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (24/11) பாராளுமன்ற அமர்வில், செல்வராசா கஜேந்திரன் எம்.பி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை “தேசிய தலைவர்” என குறிப்பிட்டமைக்கு, பாராளுமன்ற சிங்கள உறுப்பினர்களுக்கு இடையில் வெடித்த சர்ச்சையின் போது, அதனை சபைக்கு தலைமை தாங்கிய வேலு குமார் எம்.பி சர்ச்சையை கையாண்ட விதத்தை பாராட்டியே மனோ எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில், சிங்கள எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் புண்படுத்தலாம். ஆனால் ஒரு தமிழ் எம்.பி, தான் நம்பும் தனது கருத்தை சபையில் கூற முடியாதா? என சிங்கள மொழியில் அரசு தரப்பை பார்த்து சபைக்கு நேற்று தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கேட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில், ‘தேசிய தலைவர்’ என்ற தமிழ் பதத்தை, தனது தமிழ் உரையில் பயன்படுத்திய தமிழ் எம்.பி கஜேந்திரனை விடவும், அதை மறுத்து, கஜேந்திரன் எம்.பியின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து அகற்றுங்கள் எனக் கூச்சலிட்ட சிங்கள இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, விமல் வீரவன்ச கட்சியின் மொஹமட் முசாம்பில் எம்.பி மற்றும் ஏனைய அரசு தரப்பு சிங்கள எம்.பிக்களை விடவும்,

கஜேந்திரன் எம்.பி அவர் கருத்தை கூறுகிறார். அவருக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது. அதை நான் எப்படி தடை செய்ய முடியும்? நீங்கள் இதுபற்றி புகார் செய்கிறீர்கள் என்றால், நான் அதை சபாநாயகரிடம் கூறுகிறேன். ஆனால் கஜேந்திரன் எம்.பியின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து அகற்ற நான் இப்போது உத்தரவிடமாட்டேன் என சுத்தமான சிங்களத்தில் மீண்டும், மீண்டும், உரக்க கூறிய வேலு குமார் எம்.பியே துணிச்சல் மிக்கவர் என்றும் பாராட்டுக்குரியவர் எனவும் மனோ எம்.பி குறிப்பிட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version