சுற்றுலா அமைச்சு, இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளங்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வின் புகைப்படங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டிருந்தது.
புகழ்பெற்ற கண்டி ஏரி, யாழ். நல்லூரான் செம்மணி வளைவு, யாழ். மந்திரி மனை, பத்தேகம கிறிஸ்தவ மகளிர் பாடசாலை, வெல்லவாய தேசிய இளைஞர் படையணி, பொரளை தேசிய ஆயுர்வேத போதனா வைத்தியசாலை மற்றும் குருநாகலில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.