மக்களுக்கான திட்டங்களுக்காக எம்மை தாக்க பலர் முயற்சி – சஜித் 

பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களை முன்னெடுத்து வரும் போது, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கும்பலாகவும், தனித்தனியாகவும், தன்னை அவமானப்படுத்தி, தன் மீது பொறாமை கொண்டு, தன் மீது வெறுப்பை வெளிப்படுத்தி, கோபத்தை வெளிப்படுத்தி, பகைமை காட்டி வருகின்றனர். வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டு மக்களுக்கும், பிள்ளைகளுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு எதிரானவர்களே இவை அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்ததாக அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பகிர்ந்தளித்து வரும் போது, ​​வளங்கள் இல்லாத இடத்துக்கு வளங்களை வழங்கும் போது, ​​குறைபாடுகளுக்கு தீர்வுகளை காணும் போது, ​​அனைவரும் சேர்ந்து கொண்டு தன்மீது சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தன்னையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் தூரப்படுத்தி, மட்டம் தட்ட செயல்பட்டு வருகின்றனர்.  அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் 220 இலட்சம் மக்களும் ஐக்கிய மக்கள் சக்தியுடனே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 247வது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குருநாகல், ஹிரியால நிகதலுபொத, தித்தவெல்கால அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(21.06) நடைபெற்றது. இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த சேறு பூசும் நடவடிக்கை 10096 பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நாற்பத்தொரு இலட்சம் பிள்ளைகளுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும். தம்முடன் இருக்கும் பிரச்சினைகளுக்கு பாடசாலை பிள்ளைகளை பழிவாங்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கப்படுவதற்கு, விவசாயிக்கு உர மானியம் வழங்கப்படுவதற்கு, விவசாயிகளுக்கு பயிர் கொள்முதல் திட்டங்கள் உருவாக்கப்படும் போது, புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் போது, பொருளாதாரம் வளர்ச்சியடை நடவடிக்கை எடுக்கும் போது பொறாமைத்தன கட்சி சகலதையும் எதிர்த்து வருகிறது. வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டால்  இவ்வாறு முன்னோக்கி பயணிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

யார் என்ன செய்தாலும், சொன்னாலும் நாம் எமது வழியில் பயணிப்போம். உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் ஸ்மார்ட் கல்வியை நடைமுறைப்படுத்தும் போது, ​​நமது நாட்டில் பழங்காலக் கல்வி முறையே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவே இதனை மாற்றியமைத்து ஸ்மார்ட் கல்வியைப் போன்று ஆங்கிலக் கல்வியும் முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version