DLS முறைமையின் ஸ்தாபகரின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்த ஐசிசி 

கிரிக்கெட் போட்டிகள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்படும் போது, ஓவர்களுக்கமைய போட்டியின் வெற்றியிலக்குகளை ஒழுங்குபடுத்துவதற்கு பயன்படுத்தப்படும் டக்வொர்த் லூயிஸ் முறைமையை (Duckworth-Lewis-Stern) உருவாக்குவதற்கு துணைபுரிந்த பிராங்க் டக்வொர்த்தின்(Frank Duckworth) மரணத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை வருத்தம் வெளியிட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் 2014ம் ஆண்டு வரை புள்ளியியல் ஆலோசகராக இருந்த 84 வயதான பிராங்க் டக்வொர்த் கடந்த 21ம் திகதி உயிரிழந்ததாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிராங்க் டக்வொர்த்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட DLS முறைமைய இரண்டு தசாப்தங்களுக்கு அதிகமாக பயன்பாட்டில் உள்ளதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பொது முகாமையாளர் வாசிம் கான் நினைவுகூர்ந்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version