நாளையும் பணிப்புறக்கணிப்பை அறிவித்த ஆசிரியர்கள், அதிபர்கள் 

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் நாளையும்(27.06) தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் நாளைய தினமும் சுகயீன விடுமுறையை அறிவித்து, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் கொழும்பில் இன்று(26.06) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 

சம்பள முரண்பாடுகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று(26.06)  சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version