கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூன்று நாட்களுக்கு பனிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பல வருடங்களாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற போதும் தீர்வுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு எதிராக இந்தப் பனிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நேற்று(26.06) முதல் மூன்று நாட்களுக்கு பனிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், வார இறுதி நாட்கள் மற்றும் சிறப்பு அரச விடுமுறை தினங்களின் போதும் சேவையில் ஈடுபட போவதில்லை என கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதில் வழங்காவிட்டால் மாவட்ட அளவில் போராட்டங்கள் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.