இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அப்ரோஸ் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமை உரை ஆற்றினார்.

உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் யோகா பயிற்சியின் சிறப்பம்சங்களையும், முக்கியத்துவத்தையும் பற்றி எடுத்துரைத்தார்.

இதன்போது 200 இற்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகளுக்கு யோகா பயிற்சியளிக்கப்பட்டது.

சர்வதேச யோகா தின விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு சிறப்பாக சுவரொட்டி தயாரித்த மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கினார்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சேக் அப்துல்லா, பாத்திமா கனி, தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் வெற்றி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version