வடக்கின் மீள் எழுச்சிக்கு ஜப்பானின் துறைசார் அறிவு அவசியம் – பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

ஜப்பானின் துறைசார் அறிவு வடக்கின் மீள் எழுச்சித் திட்டங்களுக்கு
பயன்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும்
வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது,தொழில்நுட்ப அறிவு , திறன் அபிவிருத்தி, மனிதவள முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்களில்
அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கூறினார்.

இதேவேளை விவசாயம், கல்வி, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி,
நிதி முகாமைத்துவம், ஊட்டச்சத்து திட்டங்கள், விசேட தேவையுடையோருக்கான கல்வி உள்ளிட்ட விடயங்களில்
புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version