உன்னத தலைவரை இழந்த தமிழ் தேசியம்

நீண்ட காலம் தமிழர்களை வழிநடத்திய ஒரு உன்னதமாக பெரும் தலைவரை தமிழ் தேசியம் இழந்துவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் ஐயாவின் இழப்பு தமிழ் மக்களை பொறுத்தவரை காலத்தினுடைய பெரும் இழப்பாகவே கருதப்படுகின்றதகவும், அவர் விட்டுச் சென்ற பணிகளை ஒன்றாக இணைந்து முன்னெடுப்பதே அவருக்கு செலுத்தும் மரியாதை எனவும்  சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

வடக்கு மற்றும் கிழக்கை இணைப்பதில் மூலக்காரணமாக இருந்து, தேசிய தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மிகப் பெரும் தலைவரை தமிழ் தேசியம் இழந்திருக்கின்றது. இந்நிலையில், அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version