திருகோணமலை – குறிஞ்சாக்கேணி பகுதியில் நேற்று (25/11) முதல் இலங்கை கடற்படையினரால் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மிதப்பு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட அறுவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பிரதேசத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் சேவை வழங்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து, குறிஞ்சாக்கேணி பாலப் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, இலங்கை கடற்படையினரால் அங்கு படகு சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் நிஷந்த உலுகேதென்ன இது தொடர்பில் குறிப்பிடுகையில், அன்றாட தேவைகளுக்காக பாடசாலை மாணவர்கள் உட்பட பலரின் நன்மை கருதி, குறிஞ்சாக்கேணி பாலம் முழுமையாக புனரமைப்பு செய்துமுடிக்கும் வரை, கடற்படையினரின் படகு சேவை தொடரும் என்பதோடு மேலும் இப்படகு சேவையானது காலை 7.00 – 8.00 மணி வரையும், மதியம் 12.00 – 2.00 மணி வரையும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.