LPL – காலி, யாழ் அணிகளிடையிலான மோதல் ஆரம்பம்

LPL - காலி, யாழ் அணிகளிடையிலான மோதல் ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் போட்டி தொடர் ஒரு நாள் இடைவெளியின் பின்னர் இன்று(05.07) தம்புள்ளை, ரங்கிரி சர்வதேச மைதானத்தில் கோல் மார்வல்ஸ், ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் ஜப்னா கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

காலி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் காணப்படுகிறது. யாழ் அணி ஒரு வெற்றியை பெற்று மூன்றாமிடத்தில் காணப்படுகிறது.

யாழ் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தனஞ்சய டி சில்வா, பெஹ்ரன்டோப் ஆகியோர் நீக்கப்பட்டு ப்ரமோட் மதுஷான், அலெக்ஸ் ரோஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, ஷகூர் கான், மால்ஷா திருப்பதி, இசுரு உதான

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், ரிலி ரொசோவ், பேபியன் அலன், ஹஸ்மதுல்லா ஓமர்சாய், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, அலெக்ஸ் ரோஸ், ப்ரமோட் மதுஷான்

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version