லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஐந்தாவது நாளாக இன்று தம்புள்ளை ரங்கிரி சர்வதேசக் கிரிக்கட் மைதானத்த்தில் ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் மற்றும் கண்டி பல்கோன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி முதற் போட்டியாக ஆரம்பித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி பல்கோன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
அணிகளுக்குமிடையில் கண்டியில் நடைபெற்ற முதற் போட்டியில் கொழும்பு அணி 51 ஓட்டங்களினால் வெற்றி பெற்றிருந்தது. இந்தப் போட்டியில் கொழும்பு அணி வெற்றி பெற்றால் முதலிடத்தை தனதாக்கும். கடனை வெற்றி பெற்றால் ஓட்ட நிகர சராசரி வேகத்தில் இடம் தீர்மானிக்கப்படும். ஆனாலும் மூன்றாம் இடத்தில தொடரும் வாய்ப்புகளே அதிகம் காணப்படுகிறது.
அணி விபரம்
கண்டி அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுளள்ன. கஸூன் ரஜித, அஹா சல்மான் நீக்கப்பட்டு, சத்துரங்க டி சில்வா, சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுளள்ன. பினுர பெர்னாண்டோ, ஷெவோன் டானியல், முஹமட் வசீம், நீக்கப்பட்டு அஞ்சலோ பெரேரா, டஸ்கின் அஹமட், கருக்க சங்கீத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் – சாமிக்க கருணாரட்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ், டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, அஞ்சலோ பெரேரா, கருக்க சங்கீத், டஸ்கின் அஹமட்
கண்டி பல்கோன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், டுஸ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, மொஹமட் ஹரிஸ், பவான் ரத்நாயக்க, சத்துரங்க டி சில்வா, சொரிபுல் இஸ்லாம்