வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழில் முயற்சியாண்மையை பாடத்திட்டத்தில் உள்ளீர்க்க வேண்டும் – சஜித்

எமது நாட்டின் பாடசாலை பாடத்திட்டம் தொழில்முயற்சியாண்மை, புதிய படைப்பாக்கம், புத்தக்காம் புதிய சிந்தனைகள் குறித்து போதிக்கப்படாமையே எம்மால் புதிய அம்சங்களை இலக்கு வைத்து பயணிக்க முடியாதிருப்பதற்கான காரணமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 292 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் சிலவற்றை கொழும்பு, ஹோமாகம பொல்கசோவிட்ட, அம்பலங்கொட சிறிபதி மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதன் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் தொழில்முயற்சியாண்மை குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாடசாலை மாணவர்கள் சிறந்த கல்வியுடன் பெரியவர்களாக சமூகத்திற்கு வரும்போது, அரசியல்வாதிகளிடமிருந்தோ, அரசிடமிருந்தோ அல்லது தனியார் நிறுவனங்களிடமிருந்தோ வேலைகளை எதிர்பார்க்காமல் அவர்களது படைப்பாற்றல் மற்றும் புத்தாக சிந்தனைகள் மூலம் பிரகாசிப்பார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% பங்களிப்பு நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரால் வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையில் தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும். இந்நாடு கட்டியெழுப்பப்பட வேண்டுமானால், பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும், விரிவடைய வேண்டும்.

அனைவருக்கும் நன்மை பயக்கும் சௌபாக்கியத்தை நோக்கி செல்ல வேண்டும். பொருளாதார வளர்ச்சி பெரும் செல்வந்தர்களை சுற்றி இருக்கக்கூடாது. வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். வளமான எதிர்காலத்தை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version