ஹிருணிகாவைப் பார்வையிடச் சென்ற சம்பிக்க ரணவக்க

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் குழு வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று விளக்கமறியலில் உள்ள ஹிருணிகா பிரேமச்சந்திரவை பார்வையிடச் சென்றுள்ளது.

அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணவக்க

“ஹிருணிகா பிரேமச்சந்திர மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் எவ்வித விமர்சனமும் இல்லை.

நாட்டில் செயற்படும் அரசியல் பாதாள உலகம் தமக்கு சவால் விடுக்கும் நபர்களை இலக்கு வைத்து அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version