இலங்கை பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அவரது ஓய்வை அடுத்து, புதிய பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 4 வருட காலமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளராக சனத் பீ. பூஜித கடமையாற்றி வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
