கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் – எவ்வாறு பாவிக்க வேண்டும்?

அண்மைய நட்களில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் அதிகமாகி வரும் நிலையில், வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களைத் தவிர்க்கும் முகமாக, வீட்டிலுள்ள மின் கட்டமைப்பைப் பரிசோதிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விபத்துகள் இடம்பெற்ற எந்தவோர் இடத்திலும் சிலிண்டர்கள் வெடித்திருக்கவில்லை என்றும் மின்சாரக் கட்டமைப்புகளை பரிசோதனையிட்டு பாதுகாப்பாக உள்ளதா என உறுதி செய்து கொள்ளுமாறும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட உதவி ஆய்வாளர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த இடங்களிலுள்ள திரவ பெற்றோலிய வாயு வெளியேறி காற்றில் கலந்துள்ளமையால், மின்சார சுவிட்ச் மூலம் ஏற்படும் தீப்பொறி பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காலையில் எழும் போது வீட்டில் சமையல் எரிவாயுவின் மணம் வீசினால் மின்சார விளக்குகளை ஒளிரச் செய்யாமல், கதவு, ஜன்னல்களைத் திறந்து விட்டதன் பின்னர் எரிவாயுவின் மணம் குறையும் வரை பொறுத்திருந்து எரிவாயுவைப் பயன்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் - எவ்வாறு பாவிக்க வேண்டும்?
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version