புதிதாக 14 துறைகளுக்கு வரி விதிப்பு 

இதுவரையில் கவனம் செலுத்தப்படாத 14 துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி, குறித்த துறைகளிலிருந்து வரி அறவிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று(08.07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாரிய அளவிலான மேலதிக வகுப்புகள், தனியார் பாடசாலைகள், தனியார் மருத்துவ சேவைகள், பொறியியல் சேவைகள், நில அளவை சேவைகள் உள்ளிட்ட  பல முக்கிய துறைகள் இதனுள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக  நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

வரி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் நிலையில், வரியை செலுத்தாமல் இருக்க எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version