LPL – கண்டி அணிக்கு அபார வெற்றி

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் இன்றைய முதற் போட்டியில் ஜப்னா கிங்ஸ்,கண்டி பல்கோன்ஸ் அணிகள் மோதின. தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கண்டி அணி 7 விக்கெட்களினால் அபாரமான வெற்றியை தனதாக்கியுள்ளது. இந்த வெற்றி LPL தொடரில் துரதியடிக்கப்பட்ட கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாக மாறியது. இந்த தோல்வியின் மூலம் யாழ் அணி முதலிடத்தை இழக்க காலி அணி முதலிடத்தை பெற்றது. கண்டி அணி ஐந்தாமிடத்திலிருந்து நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டி பல்கோன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

226 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி கண்டி அணி அதிரடி ஆரம்பத்தை ஏற்படுத்தியது. அன்றே பிளட்சர் 16(6) ஓட்டங்களை பெற்ற வேளையில் ப்ரமோட் மதுஷானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மொஹமட் ஹரிஸ் 25(18) ஓட்டங்களுடன் ரப்ரைஸ் ஷம்ஸியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹரிஸ் சந்திமால் 54 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். ஒரு பக்கமாக அதிரடி நிகழ்த்திய டினேஷ் சந்திமால் 89 ஓட்டங்களை 37 பந்துகளில் பெற்றுக்கொண்டார். கமிந்து மென்டிஸ், டினேஷ் சந்திமால் ஜோடி 72 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். கமிந்து மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ் ஜோடி போட்டியை நிறைவு செய்தனர். இருவரும் ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். கமிந்து மென்டிஸ் 65(36) ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 29(13) ஓட்டங்களையும் பெற்றனர்.

கண்டி அணி 18.2 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்றது.

யாழ் அணியின் பந்துவீச்சில் ரப்ரைஸ் ஷம்ஷி 4 ஓவர்களில் 46 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். ப்ரமோட் மதுஷான் 3 ஓவர்களில் 33 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்களை கைப்பற்றினார்.

யாழ் அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ் ஆகியோர் இணைந்து அபாரமான ஆரம்பத்தை வழங்கினார். பத்தும் நிஸ்ஸங்க அதிரடியாக ஓட்டங்களை குவித்தார். 112 ஓட்ட இணைப்பாட்டத்தில் 26(23) ஓட்டங்களை மட்டுமே குஷல் மென்டிஸ் பெற்றுக்கொண்டார். இந்தப் போட்டியில் கண்டி அணிக்காக சேர்த்துக்கொள்ளப்பட்ட ரமேஷ் மென்டிஸ் குஷலின் விக்கெட்டை கைப்பற்றினார். பத்தும் நிஸ்ஸங்க தனது முதலாவது 20-20 சதத்தை பெற்றுக்கொண்டார். இந்த சதத்தோடு இந்த தொடரில் கூடுதலான ஓட்டங்களை பெற்றவராக மாறியுள்ளார். விளையாடிய சகல போட்டிகளிலிம் 50 ஓட்டங்களை அவர் கடந்துள்ளார். இறுதியில் 119(59) ஓட்டங்களை பெற்று தஸூன் சாணக்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். LPL போட்டி ஒன்றில் ஒரு துடுப்பாட்ட வீரர் பெற்றுகொண்டா கூடுதல் ஓட்டமிதுவாகும். அடுத்த இடத்தில யாழ் அணியின் அவிஷ்க பெர்னாண்டோ காணப்படுகிறார். அவரோடுஜோடி சேர்ந்த ரிலி ரொசவ் அதிரடி நிகழ்த்த வேகமாக ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. ரிலி ரொசவ் 41(18) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அவிஷ்க பெர்னாண்டோ 16(07) ஓட்டங்களை பெற்று டுஸ்மாந்த சமீரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சரித அசலங்க 02 ஓட்டங்களோடு டுஸ்மாந்த சமீரவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அஷ்மதுல்லா ஒமர்ஷாய் 01 ஓட்டத்துடனும், வனுஜா சஹான் ஓட்டமின்றியும் தஸூன் சாணக்கவின் இறுதி ஓவரில் ஆட்டமிழந்தனர்.

யாழ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்றது. இந்த வருட LPL தொடரில் பெறப்பட்ட கூடுதலான கூட்டங்கள் இதுவாகும்.

பந்துவீச்சில் ரமேஷ் மென்டிஸ் 3 ஓவர்கள் பந்துவீசி 28 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். வனிந்து ஹசரங்க 4 ஓவர்களில் 40 ஓட்டங்களை வழங்கினார். தஸூன் சாணக்க ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்களை வழங்கினார். டுஸ்மாந்த சமீர 4 ஓவர்கள் பந்துவீசி 44 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்டை கைப்பற்றினார். தஸூன் சாணக்க 4 ஓவர்களில் 40 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார்.

யாழ் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளை தொடர்ச்சியக பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகின்றது. கண்டி பல்கோன்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றியிட்டி இறுதியிடத்தில் காணப்படுகின்றது. இறுதியாக விளையடிய 3 போட்டிகளிலிம் கண்டி அணி தோல்வியை சந்தித்துள்ளது. இவ்வாறான நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமைகிறது.

அணி விபரம்

ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக அஹான் விக்ரமசிங்க நீக்கப்பட்டு வனுஜ சஹான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, ரிலி ரொசோவ், ஹஸ்மதுல்லா ஓமர்சாய், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, அலெக்ஸ் ரோஸ், ப்ரமோட் மதுஷான், ரப்ரைஸ் ஷம்ஸி, வனுஜ சஹான்

கண்டி அணி சார்பாக பவான் ரத்நாயக்க நீக்கப்பட்டு கவிந்து பத்திரன சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளை லக்சன் சன்டகான் நீக்கப்பட்டு ரமேஷ் மென்டிஸ் இந்த அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

கண்டி பல்கோன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், மொஹமட் ஹரிஸ் டுஸ்மந்த சமீர, கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, ரமேஷ் மென்டிஸ், சொரிபுல் இஸ்லாம், கவிந்து பத்திரன

LPL இல் கூடுதலான ஓட்டங்களை பெற்றார் பத்தும் நிஸ்ஸங்க. யாழ் அணிக்கு சிறந்த ஓட்ட எண்ணிக்கை.
https://vmedianews.com/archives/50859

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version