ஐந்து நாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதிகளில் குஷ் ரக கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்க அதிகாரிகளினால் இந்த கஞ்சா உள்ளடங்கிய பொதிகள் நேற்று (25/11) மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பொதிகள் கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து பொதி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவை ராகமை, பிலியந்தலை, கொழும்பு, கண்டி மற்றும் அஹங்கம ஆகிய பிரதேசங்களின் முகவரியிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குஷ் ரக கஞ்சாவின் பெறுமதி 20 மில்லியனுக்கும் அதிகமானதெனவும் தெரிவித்துள்ளனர்.
