கொரோனா திரிப்படைந்து இறுதியாக கண்டு பிடிக்கப்பட்ட வைரஸுக்கு உலக சுகாதார இஸ்தாபனம் “ஓமிக்ரோன்” என பெயர் சூட்டியுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி ஓமிக்ரோன் வைரஸ் தென்னாபிரிக்காவில் இனம் காணப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இஸ்ரேல், பெல்ஜியம், பொஸ்வானா, ஹொங் கொங் ஆகிய நாடுகளிலும் இனம் காணப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஆபத்தானது எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் இந்த வைரஸ் இனம் காணப்பட்டதனை தொடர்ந்து, பல நாடுகள் தென்னாப்பிரிக்காவிற்க்கான பயண தடையினையும், தங்கள் நாடுகளுக்குள் ஆப்பிரிக்கா கணடங்களிலிருந்து வருபவர்களை உள்ளெடுப்பதனையும் தடை செய்துள்ளன.
இலங்கையில் இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு காணப்படுவதாகவும், மக்களை அவதானமாக இருக்குமாறும் சுகாதர துறை நீண்ட நாட்களாக தெரிவித்து வருகின்றது. எனவே இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றுக்களும், மரணங்களும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்ப்படவேண்டிய காலகட்டம் இது.