லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று (10.07) இரண்டாவது போட்டி கண்டி பல்கோன்ஸ் மற்றும் கோல் மார்வல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தம்புள்ளை, ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய கண்டி அணி பவர் ப்ளே வரையில் அதிரடியாக ஆரம்பித்திருந்தாலும் 2 விக்கெட்களை இழந்திருந்தன. அதன் பின்னர் பவர் ப்ளே நிறைவடைந்தவுடன் அடுத்த விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அன்றே ப்லட்சர் மற்றும் அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். அன்றே ப்லட்சர் அவரது அரைச்சதத்தை பூர்த்தி செய்துகொண்டார். அதன் பின்னர் இணைப்பாட்டம் முறையடிக்கப்பட விக்கெட்டுகள் அடுத்தடுத்து வேகமாக வீழ்ந்தன.
கண்டி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது. இதில் அன்றே ப்லட்சர் 69(43) ஓட்டங்களை பெற்றிருந்தபோது பிரபாத் ஜெயசூர்யவின் பந்தில் ஆட்டமிழந்தார். தினேஷ் சந்திமால் 32(14) ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் இவரும் பிரபாத் ஜெயசூர்யவின் பந்தில் ஆட்டமிழந்தார். அஞ்செலோ மத்தியூஸ் 29(15) ஓட்டங்களை பெற்ற வேளையில் டுவைன் பிரிட்டோரியஸின் பந்தில் ஆட்டமிழந்தார். வனிந்து ஹசரங்க ஓட்டங்கள் ஏதும் பெறாமல் முதற் பந்திலேயே ஆட்டமிழந்தார். இறுதியில் ரமேஷ் மென்டிஸ் அதிரடியாக துடுப்பாடி அணியை மீட்டெடுத்தார். இவர் 28(14) ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் டுவைன் பிரிட்டோரியஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூரிய 4 ஓவர்களில் 30 ஓட்டங்களை வழங்கி 3 விக்கெட்களையும், டுவைன் பிரிட்டோரியஸ் 4 ஓவர்களில் 37 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்களையும், இசுறு உதான, , கவிந்து நதீஷான், மஹீஸ் தீக்ஷண ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்
அணி விபரம்
கண்டி பல்கொன்ஸ் – வனிந்து ஹசரங்க, அஞ்சலோ மத்தியூஸ், கசன் ராஜித , கமிந்து மென்டிஸ், அன்றே ப்லட்சர், டினேஷ் சந்திமால், தஸூன் சாணக்க, மொஹமட் ஹரிஸ், ரமேஷ் மென்டிஸ், கவிந்து பதிரத்னே, சொரிபுல் இஸ்லாம்
கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, பிரபாத் ஜயசூரிய, இசுரு உதான,கவிந்து நதீஷான்