பெம்முல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று(11.07) மாலை கொழும்பு கோட்டையிலிருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரயிலில் நிலவிய சன நெரிசலின் காரணமாகவே குறித்த பயணி தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தபடுவதனால், ரயிலில் சன நெரிசல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.