வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்கு 376 மில்லியன் ஒதுக்கீடு

வவுனியா மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக அரசாங்கத்தினால் 376 மில்லியன்( 37.6 கோடி) ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர தெரிவித்துள்ளார்.

இதனூடாக பாடசாலைகளின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 118 மில்லியன் ரூபாவும், வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 100 மில்லியன் ரூபாவும், வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ஏனைய நிதியும் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலக உணவு வேலைத்திட்டத்தினால் 20 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர தெரிவித்துள்ளார். 

குறித்த விடயங்கள் அனைத்தும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, மாவட்ட செயலாளரினால் முன்வைக்கப்பட்டதுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version