புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகம் 

2021ம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் பிறந்த குழந்தைகளுக்கு புதிய வகையிலான தேசிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தேசிய பிறப்புச் சான்றிதழில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தகவல்கள் அச்சிடப்பட்டிருப்பதுடன், பிறந்த குழந்தைகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டை இலக்கமும் உள்ளடக்கப்பட்டிருக்கும். 

எதிர்வரும் காலங்களில், 2021ம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் பிறந்த குழந்தைகளை ஆரம்ப பாடசாலைக்கு அல்லது பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளும் போது பழைய பிறப்புச் சான்றிதழ்களை பயன்படுத்த இயலாது. 

ஆகவே, உடனடியாக புதிய தேசிய பிறப்புச் சான்றிதழை குழந்தைகள் பிறந்த பிரதேச செயலகங்களினுடாக பெற்றுக்கொள்ள இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பழைய பிறப்பு சான்றிதழுடன் பிரதேச செயலகங்களுக்கு சென்று இலவசமாக புதிய தேசிய பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

எதிர்வரும் காலங்களில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கும் புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ்களே வழங்கப்படவுள்ளது.  

புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் அறிமுகம் 
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version