கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்ட பொன்சேகா

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றக் குழுக் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்கு இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமை மீதான விமர்சனங்கள் உள்ளிட்ட பல காரணங்களால்
இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply