30,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்துள்ளதாகத் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,057 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளத்துடன், குறித்த எண்ணிக்கை 6,910 காணப்படுகின்றது

மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் 11,661 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,818 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், டெங்கு நுளம்பு பெருகாத வகையில் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version