எண்ணெய் இறக்குமதிக்காக ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடனில் இதுவரை 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேயிலை ஏற்றுமதியின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இவ்வாறு கடன் செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையினுடாக தேயிலை ஏற்றுமதியின் மூலம் கனிய வளத்துறைக்காக ஈரானுக்கு செலுத்த வேண்டிய 251 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில், 4.1 மில்லியன் கிலோ தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம், முதல் 4 மாதங்களில் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவை விட மூன்று மடங்கு அதிகமாக இவ்வருடம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.